Site icon Sangathy News

வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் நேற்றைய தினம் பாரவூர்தியும், உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.

உந்துருளி, பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியின் ஓட்டுநர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றது.

அந்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், தனமல்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version