Site icon Sangathy News

திருகோணமலையில் விபத்து : ஒருவர் பலி…!

திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கடல்கமுவ வீதியிலிருந்து திருஞானசம்பந்தர் வீதியை நோக்கிப் பயணித்த உந்துருளி, எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, வேனின் சாரதியும் உந்துருளியில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version