Site icon Sangathy News

SJBயின் நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளர் பதவி விலகல்…!

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் நகர முதல்வர் அசோக சேபால ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இணை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் விலகவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தனது அரசியல் பயணம் தொடரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சில உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ஏற்கனவே விலகியுள்ளனர்.

இதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்குரிய உறுப்பினர் தெரிவை மையப்படுத்தியே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி சபை ஆசன பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையே தான் பதவி விலகக் காரணம் எனவும் அசோக சேபால தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version