Sangathy News

நடிகை அமலாபால் வீட்டில் நடந்த விசேஷம் : வைரலாகி வரும் அசத்தல் புகைப்படம்..!

நடிகை அமலாபால் தனது குழந்தைக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞானஸ்நானம் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அமலாபாலுக்கு, மைனா திரைப்படம் பெரிய திருப்பு முனையாக இருந்தது.

பின்பு தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தார். தொடர்ந்து சூர்யா, தனுஷ், விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அசத்தினார்.

தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் ஏ.எல் விஜய்யுடன் அமலாபாலுக்கு காதல் ஏற்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பின்பு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தனது இரண்டாவது காதல் கணவருடன் அடிக்கடி வெளியே செல்லும் அமலாபால் புகைப்படத்தினையும் வெளியிட்டு வந்தார்.

பின்பு கர்ப்பமாக இருந்த அமலாபாலுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், இக்குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்நானம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version