Site icon Sangathy News

லிவர்பூல் கார் தாக்குதல் : 15 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை..!

லிவர்பூல் எஃப்சி பிரீமியர் லீக் கோப்பை வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் நடத்திய அணிவகுப்பின்போது, வேகமாக வந்த கார் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே மோதியது.

திங்கட்கிழமை இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள வாட்டர் தெரு என்னும் தெருவில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேனியல் ஈவ்சன் என்பவரும் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த பேரணியில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.

டேனியலின் மனைவி தங்கள் குழந்தையை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, கூட்டத்தில் கார் மோதியபோது, டேனியலின் குழந்தை இருந்த தள்ளுவண்டி சுமார் 15 அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

டேனியலின் மனைவியோ, காருக்கு அடியிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக டேனியலின் குழந்தையான டெடி பெரிய காயங்கள் எதுவுமின்றி உயிர் பிழைத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

டேனியலின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன் மனைவி காருக்கடியில் சிக்கி, தன் குழந்தை 15 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டபோது, எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக தான் நினைத்ததாக தெரிவித்துள்ளார் டேனியல். என்றாலும், டேனியலின் குழந்தை உயிர் தப்பிய விடயம் அவருக்கு ஆறுதலையளித்துள்ளது.

என்றாலும், அவரது மனைவியின் நிலைமை என்ன என்பது தெரியவரவில்லை.

Exit mobile version