Site icon Sangathy News

இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version