Site icon Sangathy News

மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை : எதிர்வரும் அமர்வுகளில் சமர்ப்பிப்பு..!

1988 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் எதிர்வரும் அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தாக்கல் செய்யவுள்ளார்.

இது ஏற்கனவே கடந்தவாரம் வர்த்தமானியில் சட்டமூலமாக வெளியாக்கப்பட்டுள்ளது.

தாமதமான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை இந்த சட்டமூலம் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version