Site icon Sangathy News

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு..!

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக குறித்த வர்த்மானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன்படி, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்காக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version