Site icon Sangathy News

மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்…!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மாலை முதல், மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், மன்னார், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில், மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

Exit mobile version