Site icon Sangathy News

வடமேற்கு பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் 22 பேர் காயம்

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் உள்ள மைதானமொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த பதினைந்து நாட்களுக்குள் இங்கு இரண்டாவது முறையாக ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.

இதேவேளை காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version