Site icon Sangathy News

இங்கிலாந்தில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே காரை மோதிய நபர் கைது…!

இங்கிலாந்தில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே காரை மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திலுள்ள Leicester நகரில், அதிகாலை 12.34 மணியளவில், De Montfort தெருவில், கூட்டமாக நின்றுகொண்டிருந்த பாதசாரிகள் சிலர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது.

கார் மோதியதில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார். மற்றொரு ஆணுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதியதாக Leicesterஐச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன், சம்பவம் நடந்த அதே இடத்தின் அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், காரை மோதிய நபரும், காயமடைந்துள்ள நான்கு பேரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் நிகழ்ந்த அதே இடத்தில் முந்தைய இரவு ஒரு சண்டை நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த சண்டையில் ஈடுபட்டவர்களும் இந்த விபத்தில் சிக்கியவர்களும் ஒரே நபர்கள்தானா என்பது தெரிவிக்கப்படவில்லை.

Exit mobile version