Site icon Sangathy News

2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு : மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு..!

உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா குறித்து பாபா வங்காவின் கணிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி மரணம் அடைந்தார்.

இவர் 1911ம் ஆண்டில் பிறந்துள்ள நிலையில், தனது 12 வயதில் புயலில் சிக்கி தனது இரண்டு கண்களின் பார்வையை இழந்துள்ளார்.

இந்த மோசமான சம்பவத்திற்குப் பின்பு அவர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக நம்பப்படுவதுடன், அவரது பல கணிப்பு தற்போதும் அரங்கேறியும் வருகின்றது.

பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​ குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அணு உலை விபத்து, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர் என அரங்கேறி வருகின்றது.

2020ம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா தொற்றின் தீவிரம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்து, தற்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு “The Future As I See It” எனும் புத்தகத்தை எழுதிய ஜப்பானிய மாங்கா கலைஞரான ரியோ டட்சுகி, 2020ம் ஆண்டு ஒரு வைரஸ் உருவாகி, மறையும் என்றும், மீண்டும் 2030ஆம் ஆண்டு அதே வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எழுதி இருந்தார்.

இதனை தற்போது பாபா வாங்காவின் எதிர்கால கணிப்புகளுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதன்படி வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல வீரியமடைந்து 2030ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டி காட்டுகின்றனர்.

அதே போன்று ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version