Site icon Sangathy News

காசாவின் உதவி மையம் அருகே கொடூரமாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 26 பேர் படுகொலை

காசா பகுதியில் உள்ள ஒரு உதவி மையம் அருகே இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 150 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசா நகரமான ரஃபா அருகே அமெரிக்க ஆதரவு பெற்ற மனிதாபிமான உதவி விநியோக மையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை காசா பகுதியில் இயங்கும் பல மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version