Site icon Sangathy News

சூடானில் பரவும் புதிய வகை கொலரா – 10 இலட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை

சூடானில் கொலரா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையால் தலைநகர் கார்டூம் மற்றும் ஓம்டுர்மனில் இந்த பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கோர்டோபான், சென்னார், காசிரா உள்ளிட்ட பல மாகாணங்களில் கொலரா தொற்று வேகமாக பரவுகிறது.

அதன்படி கடந்த 6 மாதங்களில் சுமார் 7 ஆயிரத்து 700 பேர் கொலரா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். தண்ணீரால் பரவும் இந்த கொலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது.

ஏற்கனவே நிலவும் உள்நாட்டு போருக்கு மத்தியில் கொலரா தொற்றும் வேகமெடுத்ததால் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 172 பேர் கொலரா தொற்றுக்கு பலியாகினர்.

இதேவேளை சூடானில் 10 இலட்சம் பேர் கொலராவால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சுகாதாரத்துறையமைச்சர் ஹைதம் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version