Site icon Sangathy News

இந்தோனேசியாவில் விபத்து : மண்ணில் புதையுண்ட தொழிலாளர்கள்!

இந்தோனேசியாவில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்தக் கல் குவாரி சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி தெரிவித்தார்.

கல் குவாரியில் பாறை விழுந்து 14 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version