தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் திகழ்ந்த ஹைன்ரிக் க்ளாசன் (Heinrich Klaasen) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
அவர், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் விளையாடியிருந்தார்.
தென்னாபிரிக்க அணிக்காக, 4 டெஸ்ட், 60 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 58 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் ஹைன்ரிக் க்ளாசன் பங்குபற்றியுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான க்ளென் மேக்ஸ்வெல், 50 ஓவர்கள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒரு சில மணி நேரங்களில், தென்னாபிரிக்காவின் ஹைன்ரிக் க்ளாசனின் ஓய்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

