Site icon Sangathy News

ட்ரோலிங் குறித்து ஓபனாக பேசிய ராஷ்மிகா

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமாகி, பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் சல்மான் கானுடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா அவரது தனிப்பட்ட வாழ்க்கை மக்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது என்பது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” நான் என்ன செய்தாலும், சொன்னாலும் அது விமர்சிக்கப்படும். சில நேரங்களில் தேவையற்ற ட்ரோலிங், எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஆரம்பத்தில் இவை எல்லாம் என் மனதிற்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், காலப்போக்கில், இதுபோன்ற கருத்துக்கள் நம் மன அமைதியைக் கெடுக்க நாம் விடக்கூடாது என்பதை உணர்ந்தேன். நமது மனதின் கட்டுப்பாடு நம் கையில்தான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version