Site icon Sangathy News

வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு

மகளிர் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த தொடரானது ஜூன் 6 ஆம் திகதி இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் க்குன்குனியா நோய் பரவல் காரணமாக குறித்த தொடரை ஒத்திவைக்கக் கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா, ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் மொஹ்சின் ராசா நக்விக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இதற்கமைய குறித்த தொடரானது ஒத்திவைக்கப்பட்டுள்ளக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version