Site icon Sangathy News

காசா உதவி விநியோக மையத்திற்கு அருகில் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ. நா கோரிக்கை 

காசாவிலுள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவிலுள்ள உதவி விநியோக மையம் ஒன்றுக்கு அருகில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த மக்கள் மீது, இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 பேர் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
அத்துடன், இந்த தாக்குதலில் காயமடைந்த 179 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 21 பேர் உயிரிழந்ததாகவும் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.
இருப்பினும் இந்தத் தாக்குதலினை மறுத்துள்ள இஸ்ரேல், குறித்த தகவல் தவறானது எனவும் தெரிவித்துள்ளது.
Exit mobile version