Site icon Sangathy News

கோஹ்லிக்கான ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்வோம்

18ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கிண்ணத்தை வெல்லாததால் முதல் கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் இரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பெங்களூர் அணித்தலைவர் ரஜத் படிதார் கூறியுள்ளதாவது,

ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திப்பது இனிமையான விடயம். ஆனால், இது புதிய சவால். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளோம். இந்திய அணிக்காகவும், பெங்களூர் அணிக்காகவும் விராட் கோஹ்லி பல ஆண்டுகளாக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்காக இந்திய ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்ல முயற்சிப்போம் எனக்கூறியுள்ளார்.

Exit mobile version