ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதில், அதிக டாட் பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் விருதை குஜராத் வீரர் முகமது சிராஜ் வென்றார்.
இந்த ஐபிஎல் தொடரில் அவர் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்படும் என்று பிசிசிஐ புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தான் அதிக மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

