Site icon Sangathy News

விபத்தில் 45 வயது நபர் உயிரிழப்பு; சாட்சிகள் முன்வரவில்லை

லொறி விபத்தில் 45 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, சாட்சிகள் முன்வரவில்லை என்று மெட் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 1 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு வென்னிங்டன் அருகே உள்ள A13 வீதியில் ஒரு கார், நின்று கொண்டிருந்த டிரெய்லரில் மோதியதாக மெட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காரை ஓட்டிச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை அவதானித்து உள்ளனர்.

இதனையடுத்து, அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணி முதல் 8.30 மணி வரை, வென்னிங்டன் இன்டர்சேஞ்சை நெருங்கி கிழக்கு நோக்கிச் செல்லும் A13 பகுதியில் இருந்த எவருடனும் பேச நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.” என விசாரணையை வழிநடத்தும் துப்பறியும் சார்ஜென்ட் ஜான் பவுண்ட்ஸ் கூறினார்.

Exit mobile version