Site icon Sangathy News

Erith பகுதியில் தீ விபத்து – ஜன்னல் கதவுகளை மூடி வைக்குமாறு எச்சரிக்கை

Erith பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை முற்றத்தில் இன்று (புதன்கிழமை, ஜூன் 4) காலை ஏற்பட்ட தீ விபத்தில், அடர்ந்த கரும்புகை உருவாகியுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளது.

மேனர் வீதியில் உள்ள தொழில்துறை முற்றத்தில் தற்போது அதிக அளவு புகை உருவாகி வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்குமாறு அலண்டன் தீயணைப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது.

பத்து தீயணைப்பு இயந்திரங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் நீரின் அளவை அதிகரிக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version