Site icon Sangathy News

ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலி – சித்தராமையா பதவி விலக கோரி பாஜக போராட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது.

இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர்.

அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

 

Exit mobile version