Site icon Sangathy News

அமெரிக்காவில் நாயை காப்பாற்ற உயிரை விட்ட பெண்

அமெரிக்காவின் நியூ ஹெம்ஷயர் மாநிலத்தில் நாயைக் காப்பாற்றிய அலிஷியா லியோனார்டி என்ற பெண் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

லியோனார்டி தமது காதலருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகே நடந்த போது கட்டு அவிழ்க்கப்பட்ட அவர்களது நாயும் கூடவே வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்த நாய் எதிர்பாராத விதமாக ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடியது.

அதனைக் கண்ட லியோனார்டி நாய்க்குப் பின்னால் ஓடினார். ரயில் மோதியதில் உயிரிழந்தார்.

நாய் உயிர் தப்பியது. அதற்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. லியோனார்டியின் காதலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.

Exit mobile version