Site icon Sangathy News

நீருக்கடியில் உள்ள எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலுக்குள் உள்ள ஆக்ஸியல் சீமவுண்ட் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கும் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிக்கும் போது மில்லியன் கணக்கான டன் எரிமலைக் குழம்பை வெளியிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்த நேரத்திலும், அதன் பின்னரும் 8 ஆயிரம் பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது.

கடலின் அடிப்பகுதி திடீரென 8 அடி சரிந்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆக்ஸியல் சீமவுண்ட் வெடித்தால் 24 மணி நேரத்தில்10 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version