Site icon Sangathy News

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு..!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்பை பிரதான அமைப்புடன் இணைத்தல் மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.

Exit mobile version