Site icon Sangathy News

மாலை வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி!

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்திலும், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய மழை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

Exit mobile version