Site icon Sangathy News

கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் கொலை; இரு சிறுவர்கள் கைது!

14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், மான்செஸ்டரின் நியூ மோஸ்டன் பகுதியில் உள்ள நெவின் வீதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார், துணை மருத்துவர்கள் மற்றும் ஒரு விமான ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

அங்கு கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் இறந்ததாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுமி மற்றும் 37 வயது பெண் ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

“ஒரு சிறுவன் தனது உயிரை இழந்த துயரமான மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவத்திற்கு பிறகு நான்கு சந்தேக நபர்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் கூறினர்.

“சிறுவனின் குடும்பத்திற்கு எங்கள் அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர், மேலும் அவர்களுக்குத் தகுதியான பதில்களை வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றும் பொலிஸார் கூறினர்.

Exit mobile version