Site icon Sangathy News

யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version