Site icon Sangathy News

விஷ்ணு விஷாலின் `இரண்டு வானம்’ முழு படப்பிடிப்பும் நிறைவு..!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது ராட்சசன் திரைப்படம். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

சுமார் 7 வருடங்கள் கழித்து இயக்குனர் ராம் குமார் உடன் இரண்டு வானம் படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்து படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இந்த 150 நாள் பயணத்தின் உணர்வை ரசிகர்கள் பெரிய திரைவில் விரைவில் பெறுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version