Site icon Sangathy News

இலங்கையில் கொவிட் பரவல் குறித்து மக்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் கொவிட் – 19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பரவிவரும் கொவிட் – 19 திரிபுகளுக்குக் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இயலுமைகள் கிடையாதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், கொவிட் தொற்றை சாதாரணமாக ஒரு சுவாச நோயாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

சாதாரண சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வேறு எந்த அறிகுறிகளையும் கொண்டிராதமையினால் சுவாச நோய்களில் ஒன்றாக கொவிட் வகைப்படுத்தப்படுகிறது.

எனவே, சுவாச நோய்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.

Exit mobile version