Site icon Sangathy News

ஜெர்மனி பூங்காவில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த யானை குட்டி

ஜெர்மனியின் பூங்கா ஒன்றில் சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு யானைக் குட்டி பிறந்தது.

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தில் உள்ள ஓப்பல் உயிரியல் பூங்காவில் இந்த யானைக்கு குட்டி பிறந்துள்ளது.

காஜா என்ற பெயரிடப்பட்ட அந்தக் குட்டி, தனது இருப்பிடத்தை சுற்றிவந்து, பெற்றோருடன் விளையாடி மகிழ்ந்தது.

குட்டிக்கு பாலூட்டுவதில் தாய் யானை சற்று சிரமப்பட்டாலும், அதன் 55 வயது அத்தை யானை மற்றும் பூங்கா ஊழியர்கள் இந்த சிக்கலைத் தீர்க்க உதவினர்.

Exit mobile version