Site icon Sangathy News

ஷிவம் சிங் அபாரம்: மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்

டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
அதிக் உர் ரகுமார் அரை சதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 49 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
Exit mobile version