Site icon Sangathy News

அனுராதபுரத்தில் 105 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

பொசன் பூரணை வாரத்தில், அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், 105 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு உணவு விற்பனை செய்தல், காலாவதியான உணவு விற்பனை செய்தல், தகவல் இல்லாமல் பூஜை பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலை காட்சிப்படுத்தப்படாமல் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியவை தொடர்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் நகரம், அனுராதபுரம் பூஜா நகரம், மிஹிந்தலை மற்றும் திசா வாவி ஆகிய பகுதிகளில் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டன.

 

Exit mobile version