Site icon Sangathy News

ஏர் இந்தியா விமான விபத்து : இறுதிச்சடங்கு செய்யப்பட்ட முதல் பிரித்தானியப் பெண்..!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் முதன்முதலாக பிரித்தானிய குடிமகள் ஒருவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த வியாழனன்று விபத்துக்குள்ளானதில் 270 பேர் வரை உயிரிழந்தார்கள்.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரித்தானிய குடிமகளான பெண்ணொருவருக்கு குஜராத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

அந்தப் பெண்ணின் பெயர் எல்சினா (Elcina Alpesh Makwana, 41). லண்டனிலுள்ள Hounslowஐச் சேர்ந்த அவர் தனது குடும்பத்தினரை சந்திக்கவும், பல் சிகிச்சைக்காவும் இந்தியா சென்றிருந்தார்.

அவர் மீண்டும் லண்டன் திரும்பும்போது, அந்த கோர விபத்து அவரது உயிரை பலிவாங்கிவிட்டது.

எல்சினாவின் மரணச் செய்தி அறிந்து அவரது கணவரான அல்பேஷ் (52) மற்றும் 11 மற்றும் 7 வயதுள்ள தம்பதியரின் மகள்கள் இருவரும் இந்தியா விரைந்தனர்.

DNA மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்சினாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நேற்று காலை குஜராத்தின் வதோதராவிலுள்ள Pensionpora இறுதிச்சடங்கு மையத்தில் எல்சினாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

கடந்த வாரம் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், முதல் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது இவருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version