Site icon Sangathy News

இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூடு : பாலஸ்தீனியர்கள் பலர் பலி…!

காசாவில், இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸின் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உணவைப் பெறுவதற்காக முண்டியடித்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், எத்தனை பேர் இந்த சம்பவத்தில் பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை, 2025 மே 26 ஆம் திகதியன்று, காசாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version