மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் மழையுடனான வானிலை தீவிரமாகும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் திறப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

