Site icon Sangathy News

அஹ்மதாபாத் விமான விபத்து : தம்பியின் உயிரிழப்பை தாங்க முடியாமல் அக்கா மாரடைப்பால் மரணம்…!

அஹ்மதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், 242 பேருடன் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விமானம் வீழ்ந்ததில் மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர்.

அந்த வகையில், உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

அஹ்மதாபாத் விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் 55 வயதான அவரது மனைவி ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தனது தம்பி போகிலால் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அவரது அக்கா (65), மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

Exit mobile version