Site icon Sangathy News

கடும் காற்றினால் யாழில் 12 பேர் பாதிப்பு….!

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றினால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, வேலணை பிரதேச செயலக பிரிவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version