Site icon Sangathy News

அமெரிக்காவை தாக்கவுள்ள எரிக் சூறாவளி : மக்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவில் எரிக் என்ற பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந்த பெரிய புயல் கரையை கடக்கும்போது காற்று பலமாக வீசும் எனவும், கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

. மியாமியை தளமாகக் கொண்ட மையம், எரிக் சூறாவளி மெக்சிகோவின் புவேர்ட்டோ ஏஞ்சலுக்கு தென்மேற்கே சுமார் 70 மைல் தொலைவிலும், புன்டா மால்டோனாடோவிற்கு தென்கிழக்கே சுமார் 90 மைல் தொலைவிலும் இருந்ததாக தெரிவித்துள்ளது.

மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் நேற்று இரவு ஒரு வீடியோ செய்தியில், இப்பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் அல்லது தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version