Site icon Sangathy News

இலங்கை வரும் ஐ.நா உயர்ஸ்தானிகர் – அழுத்தம் கொடுக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்!

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் (Volker Türk) 5 முன்னணி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இலங்கையில் தீர்க்கப்படாத மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச விசாரணையை வலுப்படுத்தவும், பொறுப்புக்கூறலைக் கோரும் வகையிலும், இலங்கைக்கான பயணத்தை அவர் பயன்படுத்த வேண்டும் என்றும், குறித்த அமைப்புகள் கோரியுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணியைப் போன்ற, உள்நாட்டுப் போர் உரிமை மீறல்களுடன் தொடர்புடைய மனித புதைகுழிகள் மற்றும் தெற்கில் ஜேவிபி எழுச்சியுடன் தொடர்புடைய மனித புதைகுழிகளைப் பார்வையிடவேண்டும் என்றும் அந்த அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் வலியுறுத்தியுள்ளன.

 

Exit mobile version