Site icon Sangathy News

தலையில் முறிந்து விழுந்த மரக்கிளை.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் – பதறவைக்கும் வீடியோ

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பனசங்காரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 29 வயது இளைஞர் அக்ஷய் தலையின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது.

இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

காயங்களுடன் ஜெயாநகர் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் அவர் உயிர் பிரிந்தது.

அவர் ஒருவரே வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு மாநகராட்சி அவரின் ரூ.4 லட்சம் மருத்துவ செலவை ஏற்றத்துடன், குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளது.

மரங்களை பராமரிக்காத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், ஒரு வேளை ஹெல்மெட் அணிந்திருந்தால் அக்ஷய் பெரிய காயங்களில் இருந்து தப்பித்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version