யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று பாரியளவிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 8ஆம் திகதி நிறைவுறுத்தப்பட்டன.
அதற்கமைய, அன்றைய தினம் வரையான 9 நாட்களில் மொத்தமாக 19 முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டன.
இதனிடையே, அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேசத் திகதியாக இன்றைய தினம் நீதவானால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

