Site icon Sangathy News

உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மாத்திரம் புதிய இரத்த வகை – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

பிரெஞ்சுப் பெண்ணுக்குப் புதியதோர் இரத்த வகை இருப்பதைப் பிரெஞ்சு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த குறித்த பெண்ணு புதிய ரத்த வகை ‘Gwada negative’ என்று அழைக்கப்படுகிறது.

உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 48ஆம் ரத்த வகை அது என்று நம்பப்படுகிறது.

15 ஆண்டுக்கு முன்னர் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவிருந்த பெண் மீது மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் போது ஆய்வாளர்களுக்கு அவருடைய இரத்த மாதிரி கிடைத்தது.

அந்தப் பெண்ணின் இரத்தத்தில் வழக்கத்துக்கு மாறான நோய் எதிர்ப்புச் சக்திப் புரதம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

ஆனால் அப்போது கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள போதிய வளங்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் ஒரு வகையான DNA சோதனை மூலம் பெண்ணின் ரத்தம் முறையாகச் சோதிக்கப்பட்டது.

உலகில் அந்த ரத்த வகையைக் கொண்ட ஒரே பெண் அவர் மட்டும்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Exit mobile version