Site icon Sangathy News

இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தளபதி தொடர்பில் வெளிவந்த தகவல்

ஈரான் ராணுவத் தளபதி சயீத் இஜாதியை வான் தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட தளபதி 2023-இல், இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை திட்டமிடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கோம் நகரில், அவர் பதுங்கியிருந்த வீட்டை நீண்ட தேடலுக்குப் பின் உளவுத்துறையினர் கண்டுபிடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கும், ஈரான் ஆட்சியாளர்களுக்கும் இடையே பாலம் போல் சயீத் இஜாதி செயல்பட்டதாகவும், ஹமாஸுக்கு நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

Exit mobile version