Site icon Sangathy News

தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் விமான நிலையங்கள்

பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்கக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.

வளைகுடாவின் சில பகுதிகளில் அதிகரித்த பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version