Site icon Sangathy News

அணையா விளக்கு போராட்ட களத்தில் பதற்றம்!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணி அளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர். இதன் பொழுது போராட்டகாரர்களால் யாழ். மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

மேலும் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதேவேளை விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

இதேபோன்று அப்பகுதிக்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

Exit mobile version