Site icon Sangathy News

டிரம்ப் கூறிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை – புலனாய்வு அமைப்புகள் தகவல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை, மாறாக பல மாத பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தியதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

பென்டகனின் ஆரம்ப சேத மதிப்பீட்டின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடு “முற்றிலும் தவறானது” என்றும் ஜனாதிபதி டிரம்பை இழிவுபடுத்துவதற்கான “தெளிவான முயற்சி” என்றும் வெள்ளை மாளிகை கூறுகிறது.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்த உளவுத்துறை மதிப்பீட்டிற்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ட்ரூத் சோஷியலில் தோன்றிய டிரம்ப், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அவர்களின் அறிக்கைகளை கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நாசப்படுத்த நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் முயற்சிப்பதாக அவர் கூறுகிறார்.

Exit mobile version