Site icon Sangathy News

இந்தியாவின் வான்வெளி பாகிஸ்தானுக்கு தொடர்ந்தும் மூடப்படும் என அறிவிப்பு

பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடுவதை நீட்டித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் திகதி அன்று பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது.

இது நேற்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் வான்வெளி மூடலை மேலும் நீட்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அது ஜூலை 24 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும்.

Exit mobile version